சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதன் காரணமாக அவர்களுடைய திசுக்கள் சேதமடைகின்றன. திசுக்கள் சிதைவடைவதை தடுப்பதற்காகவும், முன்கூட்டியே அறிவதற்காகவும் தற்போது அவர்களுடைய விரல் நகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றன என்ற தகவலை சர்க்கரை நோய் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாவதற்கு நோயாளிகளின் உடலில் ஏற்கனவே இருக்கும் தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணியாக திகழ்கின்றன.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாதன் காரணமாக அவர்களுடைய திசுக்கள் சேதமடைகின்றன. இதன் காரணமாக நாளடைவில் இதயம், சிறுநீரகம், தோல், எலும்புகள் மற்றும் மூட்டுகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளும் பாதிப்படைகின்றன. இதனைத் தடுப்பதற்கு சர்க்கரை நோயாளிகளின் திசுக்களை பரிசோதனைக்காக மருத்துவர்கள் எடுப்பதுண்டு.
இந்நிலையில் திசு பரிசோதனையின் புதிய உத்தியாக அவர்களது விரல் நகங்களைப் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, திசு சிதைவை குறித்து முன்கூட்டியே கண்டறியலாம் என்றும், சத்திரசிகிச்சையற்ற பரிசோதனை முறை தற்போது அறிமுகமாகியிருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பரிசோதனையின் போது விரல் நகங்களில் உள்ள கெராட்டின் என்ற கெட்டிபடுத்தப்பட்ட செல்களிலுள்ள, கிளைசேஷன் (glycation) எனப்படும் சர்க்கரை நோய்க்கான அதிகரிக்கப்பட்ட குளுக்கோஸ் காரணிகளை, நுண்ணோக்கி வழியாக கண்டறிந்து, அந்த நோயாளிகளின் திசுக்களின் பாதிப்பை கண்டறிய முடியும்.
இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள், தங்களது உடல் உறுப்புகள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளவும் முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் விவரிக்கிறார்கள். அத்துடன் 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களின் ரத்த சர்க்கரை அளவு குறித்து மருத்துவர்கள் பரிந்துரைத்த வகையில் ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் நல்ல பெருமாள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM