(இரா.செல்வராஜா)
கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரால் தயாரத்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் தடைவிதிக்கப்பட்டது. அதன் பின்னர் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டன.
இந்த கொள்கலன்களில் மஞ்சள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் காணப்படுவதுடன், இவற்றை தடுத்து வைத்துள்ளமையினால் , அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேவேளை துறைமுகத்தில் 26 ஆயிரம் கொள்கலன்கள் தேங்கி கிடப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM