உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ரிஷாத், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் குறித்து சி.ஐ.டி. விசாரணை செய்து வழங்கிய அறிக்கை தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ள எஸ்.ஐ.யூ

22 Apr, 2020 | 10:45 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடனோ அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுடனோ, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்புபட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை என சி.ஐ.டி.  கடந்த வருடம் வழங்கிய அறிக்கை தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேuடி கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ. )விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தொடர்ந்து அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

 இதனையடுத்து தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர், அம்மூவர் குறித்தும் உள்ள முறைப்பாடுகளை பொறுப்பேற்க  பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் கொண்ட குழுவை  நியமித்தார்.

 அந்த குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பின்னர், சி.ஐ.டி.யிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டன. அதன் பின்னர் சி.ஐ.டி.யின் அப்போதைய பிரதானி  சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஊடாக அந்த விசாரணையின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டது.

பின்னர்  பதில் பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி.யின் விசாரணை அறிக்கையுடன் இணைத்து , குறித்த மூவருக்கும்  பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லை என பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்திருந்தார்.

 இவ்வாறான பின்னணியிலேயே, அதே பதில் பொலிஸ் மா அதிபர் தற்போது, சி.ஐ.டி. தனக்கு வழங்கிய குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்ட விதம் மற்றும் அதில் உள்ள விடயங்கள், விசாரணை முன்னெடுக்கப்பட்ட விதம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவே இவ்வாறு எஸ்.ஐ.யூ.விடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

 இது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவிடம் கேட்ட போது ' மூன்று அரசியல்வாதிகள் தொடர்பில், அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என சி.ஐ.டி.யால் வழங்கப்பட்ட அறிக்கை குறித்து எஸ். ஐ.யூ. விசாரணை ஒன்றினை முன்னெடுக்கின்றது.' என உறுதி செய்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49