(ஆர்.யசி)
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாத காரணத்தினால் நாட்டின் நிலைமையை கையாளவும், மக்களுக்கான நிவாரண நிதியை ஒதுக்கிக்கொள்ளவும் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே அரசாங்கம் பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என பிரதான எதிர்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் நடத்தும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எழுந்துள்ள அரசியல் அமைப்பு ரீதியிலான நெருக்கடிகள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்கட்சிகள் இக்கருத்தினை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில்,
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாத காலத்தினுள் புதிய பாராளுமன்றம் கூடியாக வேண்டும். எனினும் நாட்டில் இப்போதுள்ள நிலைமையில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது. தேர்தல் நடத்தும் திகதியையும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு மாற்றுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆகவே ஜூன் மாதம் 2 ஆம் திகதியுடன் புதிய பாராளுமன்றம் கூடியாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் பின்னரும் நாட்டில் பாராளுமன்றம் இல்லாது செயற்பட முடியாது. அதுமட்டும் அல்லாது மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டியுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் ஜனாதிபதியினால் பாராளுமன்ற நிதி விடயங்களை கையாள முடியாது. ஆகவே பழைய பாராளுமன்றத்தை கூட்டி நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுத்து மக்களுக்கான நிவாரான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இது குறித்து கூறுகையில், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் அதாவது 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள காரணத்தினால் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றதாகி விட்டது. பாராளுமன்றத்தை முன்கூட்டியே ஜனாதிபதி கலைத்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்படும் திகதி, புதிய பாராளுமன்றம் கூடும் திகதியை அறிவிக்க வேண்டும். அதற்கமைய ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படும் திகதி எனவும் மே 14 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும் என அறிவித்தார். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்தும் திகதியாக அறிவித்துள்ளது. ஆகவே ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் இப்போது செல்லுபடியற்றதாகியுள்ளது. நாட்டின் நிலைமைகளை கையாள வெறுமனே நிறைவேற்று அதிகாரத்தால் மட்டுமே இதனை கையாள முடியுமா என்ற கேள்வி உள்ளது. தனி நபர் மாத்திரம் தீர்மானம் எடுக்காது பாராளுமன்றத்தை கூட்டி அனைவரும் இணைந்து ஜனநாயக கட்டுபாட்டில் செயற்பட முடியும். மக்கள் பசி பட்டினியில் கஷ்டபடாத வகையிலும் மக்களுக்கு நெருக்கடிகள் இல்லாத நிலையிலும் செயற்பட முடியுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும்.ஆகவே தான் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறுகின்றோம் என்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மிக மோசமான நோய்ப்பரவல் நிலையொன்று காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கூட்ட முடியும். ஆகவே இப்பொது நாட்டில் நிதி நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எடுப்பதும் நாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எனவே அதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டியாக வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM