கொரோனா  வைரஸின்  தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளின்போது பந்தில் உமிழ்நீர் (எச்சில்) தடவத் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக வீரர்கள் உமிழ்நீர் தடவி நன்றாக தேய்ப்பார்கள். சிறப்பாக பந்துவீசுவதற்கு இது உதவியாக இருக்கும்.

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பந்தில் உமிழ்நீர் தடவுவதற்கு தடை விதிக்க ஐ.சி.சி.திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.