சிரேஸ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியனின் இழப்பை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இவ் இழப்பானது ஈடு செய்ய முடியாததொன்றாகுமென்று, பதுளை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் அனுதாபச் செய்தியில், “நல்லதம்பி நெடுஞ்செழியனின் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கடமையாற்றி தாம் சார்ந்த சமூகத்திற்கு அளப்பறிய சேவைகளையாற்றியுள்ளார். எனது நண்பரான, இவரது சேவை நலன் பாராட்டப்பட்டு, விருதுகள் பலவற்றையும் அவர் பெற்றிருக்கின்றார்.
வீரகேசரி வாரமஞ்சரியின் குறிஞ்சிப் பகுதி அதைத்தொடர்ந்து சூரியகாந்தி பத்திரிகை ஆகியவற்றின் ஆசிரியராக கடமையாற்றி, மலையக மக்களின் நிலையினை வெளிக்கொணர்ந்ததுடன், அம்மக்களின் அவல நிலையினை நிவர்த்தி செய்யவும், அரும் பாடுப்பட்டவரே நல்லதம்பி நெடுஞ்செழியனாவார்.
சர்வதேச அரசியல் குறித்த கட்டுரைகளையும், வாசகர்களுக்கு அளித்து வந்த அவர் மிகவும் அமைதியானதும், பொறுமையானதுமான சுபாவத்தைக் கொண்ட, நடுநிலைமை செய்தியாளரான இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.
இவரது இழப்பு குறித்து அவரது குடும்பத்தினர் துயரில், தானும் நேரடியாக பங்கு கொள்கின்றேன். அத்துடன் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM