இசையமைப்பாளரும் நடி­கருமான ஜி.வி. பிர­காஷ், சைந்­தவி தம்­பதி­ய­ருக்கு பெண் குழந்தை பிறந்­துள்­ளது. தாயும் சேயும் நல­மாக இருப்­ப­தாக ஜி.வி. தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இத்­தம்­ப­தி­யர்க்கு திரை­யு­ல­கி­னர் வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர். 

கடந்த2013ஆம் ஆண்டு ஜி.வி. பிர­காஷ், சைந்­தவி திரு­ம­ணம் நடை­பெற்­றது. இந்­நி­லை­யில் கடந்­தாண்டு சைந்­தவி தாய்­மை­ய­டைந்­தார். 

இதை­ய­டுத்து ஏப்­ரல் 19 ஆம் திகதி அவ­ருக்கு அழ­கான பெண் குழந்தை  பிறந்­தி­ருப்­ப­தா­க ஜி.வி. பிர­காஷ் தரப்பு தெரி­வித்­துள்­ளது. 

‘வெயில்’ படம் மூலம் தமிழ் சினி­மா­வில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மான ஜ.வி. பிர­காஷ் கடை­சி­யாக இசை­ய­மைத்த படம் ‘அசு­ரன்’. 

தற்­போது இசை­ய­மைத்­துக் கொண்டே பல படங்­களில் நாய­க­னா­க­வும் அவர் நடித்து வரு­கி­றார். பள்­ளி­யில் படித்­த­போது சக மாண­வி­யான சைந்­த­வியை அவர் காத­லித்து திரு­ம­ணம் செய்துகொண்­டார்.