25 இலட்சத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ; பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப உத்தேசம்

22 Apr, 2020 | 12:05 PM
image

உலகம் நூறுவருடங்களுக்கு முன்பு முகம்கொடுத்தது போன்ற ஒரு பாதிப்பை தற்போது முகம் கொடுக்க உள்ளதாக உலகசுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ள நிலையில், கொவிட் - 19  வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 25 இலட்சத்து 57 ஆயிரத்து நூற்று எண்பத்தொன்றாக நேற்றைய தினம் வரை பதவாகியுள்ளது.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 177,641 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 690,444 ஆகவும் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இறப்பு சதவீதம் 6% ஆகவும்,  குணமடைந்தவர்களின் சதவீதம் 27% ஆகவும் காணப்படுகின்றது.

எனினும் அமெரிக்காவை பொறுத்தவரை, பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 818,744, ஆகவும், இறப்பு எண்ணிக்கை 45,318 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,923 ஆகவும், பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்கா கொவிட் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் நேற்றையதினம் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,985க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பாதிகப்பட்டவர்கள் வரிசையில் முதலாவதாக உள்ள ஸ்பெயினில், நேற்றையதினம் 3,968 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 204,178 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் இறப்பு எண்ணிக்கை 21,282 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,514 ஆகவும் உள்ளது.

மேலும் அதிக பாதிப்புகளை கொண்ட ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஆகிய நாடுகளில் கொவிட் தெற்று எண்ணிக்கை விபரம் வருமாறு,

இத்தாலி -  தொற்று 183,957, இறப்பு 24,648, குணமடைந்தவர்கள் 51,600

பிரான்ஸ் -  தொற்று 158,050, இறப்பு 20,796, குணமடைந்தவர்கள் 39,181

ஜேர்மணி -  தொற்று 148,453 இறப்பு 5,086,  குணமடைந்தவர்கள் 95,200

ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகியவை பூட்டுதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அத்துடன், பிரித்தானியாவில் இதுவரை  129,044 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 17,337, பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் நேற்றைய தினம் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத போதிலும் 11 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை சீனா இயல்புநிலை திரும்பி வருகின்றது.

அத்துடன் இந்தியாவில், நேற்றைய தினம் 1,541 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,080 ஆக உயர்நதுள்ளது, இங்கு 645 உயிரிழந்தும், 3,975 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இந்தியாவின் தமிழ் நாட்டை மட்டும் நோக்கும் போது அங்கு, 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதே வேளை இந்தியாவில் அதிகளவான தொற்றாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அங்கு 5218 பேர் தொற்றுக்குள்ளாகியும் 251 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.  

இலங்கையில், நேற்று வரை 310 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 7 பேர் மரணமைடைந்தும் 102 பேர் குணமடைந்தும் உள்ளனர். இலங்கையில் அதிகளவான தொற்றாளர்கள் தலைநகரான கொழும்பில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு...

2024-06-24 14:48:09
news-image

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு...

2024-06-24 14:40:26
news-image

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மோடி அரசியல்...

2024-06-24 12:11:23
news-image

அடுத்தது லெபனான் யுத்தமா? ஹெஸ்புல்லா அமைப்பை...

2024-06-24 10:58:40
news-image

டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள்யூதவழிபாட்டு தலங்கள்...

2024-06-24 06:41:54
news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22