கம்­பளை கடு­கண்­ணா­வை பகு­தி­களில் மர்ம நப­ரொ­ருவர் இர­வு­வே­ளை­களில் வீடுக­ளுக்குள் புகுந்து சமைத்த உண­வு­க­ளை­யும் குளிர்சாதனப் பெட்­டி­களில் வைக்­கப்­படும் இறைச்சி, மீன், முட்­டை­க­ளையும் திருடி வரு­வ­தோடு, தனி­மையில் இருக்கும் பெண்­க­ளி­டமும் சேஷ்டை புரிய முற்­ப­டு­வதால் சுமார் 3 கிரா­மங்­களைச் சேர்ந்த மக்கள் அச்­சத்­து­டன் வாழ்ந்து வரு­வ­தாக தெரி­விக்­கின்­றனர். 

இந்த நபர் குறித்து இது­வ­ரையில் கம்­பளை மற்றும் கடு­கண்­ணாவை பொலிஸ் நிலை­யங்­க­ளி­ல் 8 முறைப்­பா­டுகள் பதி­வாகியுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. 

இச் சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அம்­பு­லு­வால, போவல நூறு ஏக்கர் மற்றும் கரு­கண்­ணால பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எல­கி­றி­கம போன்ற கிரா­மங்­க­ளுக்குள் புகும் குறித்த மர்­ம­நபர் அங்கு தனி­மை­யி­லி­ருக்கும் பெண்­களை வல்­லு­ற­வுக்­­குட்­ப­டுத்த முயன்­றுள்­ள­துடன் வீடுகள் அனைத்­தி­லி­ருந்த உண­வுகள், குளிர்­சாதனப் பெட்­டி­க­ளி­லுள்ள இறைச்சி, மீன், முட்­டைகள் என்­ப­வ­ற்­­றையும் திருடிச் செல்­வ­தாக கிரா­ம மக்கள் தெரி­விக்­கின்­றனர். 

மேற்­கு­றிப்பிட்ட நப­ரினால் பாதிக்­கப்­பட்ட 4 பேர் கம்­பளை பொலிஸ் நிலை­யத்­திலும் ஏனை­ய­வர்கள் கடுகண்­ணாவை பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பா­­டுகள் செய்­துள்­ள­னர். இதன்­போது கடு­கண்­ணாவ பொலி­ஸார் மோப்ப நாய்­களின் உத­வி­யுடன் குறித்த பிர­தே­சங்­ககில் தேர்தல் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் பிர­தேச வாசிகள் தெரி­விக்­கின்­றனர். 

இறு­தி­யாக கடந்த புதன்­கி­ழமை மேற்­­கு­றிப்­பிட்ட மர்ம நபர் கம்­பளை அம்­பு­லு­வாவ பகு­தியில் இரண்டு வீடு­க­ளுக்குள் புகுர்ந்து அங்­கி­ருந்த சமைத்த உண­வுகள் குளிர்­சா­தன பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த மீன், முட்டை உட்­பட பானை ஒன்­றி­ணை­யும் திருடிக் கொண்டு போயுள்ளார். மர்ம நபரை பிடிக்க முற்­பட்ட சமயம் குறித்த நபர் கல் ஒன்­றினால் வீட்­டு­ரி­மை­யா­ள­ரை தாக்­கி­விட்டு தப்பியோடியுள்ளார். 

மேற்­­கு­றிப்­பிட்ட சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­­ணை­க­ளை கம்­பளை மற்­றும் கடு­கண்­ணாவ பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.