ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “மதுவுக்கு முற்றுப்புள்ளி” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரத்தில் இன்று காலை விழிப்புணர்வு பேரணியும், வீதி நாடகமும் இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணி தலவாக்கலை பொலிஸார், நுவரெலியா பிரதேச செயலகம், சமூர்த்தி காரியாலயம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மது ஒழிப்பு தொடர்பிலான மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பதாதைகளுடன் இப்பேரணி தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திலிருந்து தலவாக்கலை லிந்துலை நகரசபை வரை சென்றதுடன் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகம் தலவாக்கலை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இப்பேரணியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள், தலவாக்கலை லிந்துலை நகர சபை முன்னால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அத்தோடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிகர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதோடு, துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)