ஒரு மாதத்தில் 34, 500 பேர் கைது ! எதற்கு ?

Published By: Digital Desk 3

21 Apr, 2020 | 07:59 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் , ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக  34 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்துடன் , இவர்களிடமிருந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல் படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா,களுத்துறை ,புத்தளம் , வரக்காபொல , அலவத்துகொட  மற்றும் அக்கறைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன் , ஏனையப்பகுதிகளுக்கு தளத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு வார நாட்களில் இரவு எட்டு மணிமுதல் காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் , அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுமே இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அத்தியவசிய தேவை இன்றி முறையற்று செயற்படுவதை தவிர்தத்துக் கொள்ளவும். இதேவேளை இந்தக்காலப்பகுதியில் விநோத பயணங்கள் , உற்சவங்கள் ,விநோத நிகழ்வுகள் மற்றும் யாத்திரைகள் ஆகியவற்றில் ஈடுப்பட வேண்டாம். இந்த காலப்பகுதியை உற்பத்தி செயற்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதற்கமைய  இன்று செவ்வாய்கிழமை வரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 650  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 165   வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள ஒரு மாதகாலத்திற்குள் மாத்திரம் 34 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50