ரசிகர்கள் இல்லாமல் டென்னிஸ் போட்டிகளை நடத்துவதற்கு விம்பிள்டன் சம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின்றி மூடிய மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவது குறித்து ஸ்பெய்னின் ரபாயேல் நடால், சேர்பியாவின் நொவாக் ஜோகோவிச் ஆகிய இருவரும் அண்மையில் விவாதித்திருந்ததுடன், அதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்திருந்தனர். எனினும், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு சிமோனா ஹாலெப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
‘ரசிகர்களி டென்னிஸ் விளையாடுவது சரியாக இருக்காது. மிகப்பெரிய போட்டிகளில் நாங்கள் மிகவும் உற்சாகமாக, ரசித்து விளையாடுகிறோம் என்றால், அதற்கு ரசிகர்கள் அளிக்கும் உத்வேகமும், கரவொலியும் தான் காரணம். இல்லாவிட்டால் டென்னிஸ் வேறுவிதமான விளையாட்டாகிவிடும்‘ என்றார்.
இவ்விடயம் குறித்து செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா கூறுகையில், ‘ரசிகர்கள் தான் மிகவும் முக்கியம். இது ஒரு தனிநபர் விளையாட்டு. அதனால் தான் ரசிகர்கள் எங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM