(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி குறித்து இலங்கைக்கான இந்தியப் பதில் தூதுவர் வினோத் கே.ஜேகப் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறார்.  

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பதில் தூதுவர் தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் எடுத்துக்கூறினார்.

மேலும் இதுவிடயத்தில் தற்போது  இருநாடுகளும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றிவருவது குறித்து அவர்கள் திருப்தி வெளியிட்டனர். அத்தோடு தொற்றுநோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர்இ பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து பொறிமுறையொன்றை வகுப்பது மிகவும் அவசியமாகும் என்றும அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மோராட்டத்தில் ஈடுபடுவதற்கு இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.