(எம்.மனோசித்ரா)
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலுக்கான தினத்தை அறிவித்துள்ளது. அதற்கேற்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய தொகுதி மட்டத்தில் இம்மாதத்திலிருந்தே தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் காணப்பட்ட சிக்கலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்வளித்துள்ளது. அதனை புறக்கணிக்கவோ அல்லது விமர்சிக்கவோ முடியாது. அதனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே சுதந்திர கட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பித்திருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை தற்போது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எனினும் பாரியளவிலான கூட்டங்கள் அல்லது மக்கள் சந்திப்புக்களை துரிதமாக நடத்துவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்கள் என்பவற்றை கட்டாயமாக பின்பற்றி தேர்தலுக்கான நடவடிக்கைககளில் ஈடுபடுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம் மாதத்தில் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படும். எதிர்வரும் வாரங்களில் நாட்டில் நிலைவரத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM