கொக்கட்டிச்சோலையில் பாரிய கசிப்பு நிலையம் முற்றுகை

Published By: J.G.Stephan

21 Apr, 2020 | 01:12 PM
image

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் பிரதேச இளைஞர்களும், பிரதேச செயலக ஊழியர்களும் இணைந்து நேற்று (20) திங்கட்கிழமை பாரிய கசிப்பு நிலையம் ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளது.


இதன் போது,  6 பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கான 1000 லீற்றருக்கு மேற்பட்ட கோடா  கைபற்றப்பட்டதுன், கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


பிரதேச இளைஞர்களின் உதவியோடு அப்பகுதியின் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அண்மைய கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இப்பெரும் தொகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.





கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 


கிராமங்களில் உள்ள இளைஞர்கள்,  சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த  ஒத்துழைக்கின்றமை முன்மாதிரியான செயற்பாடாகும். இது போன்று ஏனைய இளைஞர்களும் முன்வருகின்ற போது சட்டவிரோத செயற்பாடுகளை இலகுவாக கட்டுப்படுத்த முடியுமெனவும் சமூக செயற்பட்டாளர்கள் குறிப்பிட்டனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள  அசாதாரண சூழ்நிலையிலும்,  பல இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலைகள் முற்றுகை இடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


அத்துடன், களப்பு மற்றும் நீர் நிலை அண்டிய காட்டுப்பகுதிகளிலே அதிகளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59