கொவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அமைச்சிற்கு உதவும் ரொட்டரி ஸ்ரீலங்கா

Published By: J.G.Stephan

21 Apr, 2020 | 11:28 AM
image

இன்று உலகம் பூகோள ரிதியான நெருக்கடியை எதிர்கொள்கிறது. எமது சந்ததி எதிர்கொள்ளும் மிகத் தீவிரமான நெருக்கடியாகவும் இருக்கலாம். இன்றைய திகதி வரையில், கொவிட்-19 தொற்றியவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனையும்,  இதற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 150, 000யும் தாண்டியுள்ளன.

இப்படியானதொரு நிலைமையை சில மாதங்களுக்கு முன்னாள் நினைத்திருக்கவும் மாட்டோம். இன்று கொரோனா-வைரஸ் எமது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அடுத்து வரும் வாரங்களில் மக்களும் அரசுகளும் மேற்கொள்ளும் தீர்மானங்கள், எதிர்கால உலகை வடிவமைப்பவையாக இருக்கக்கூடும்.

இந்தக் காலப்பகுதியில் ரொட்டரி ஸ்ரீலங்கா மௌனமாக இருக்கவில்லை. மாறாக, பல தசாப்தகால உறவுகளைப் பேணும் சுகாதார அமைச்சுடன் நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களிலேயே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை ஆரம்பித்தது.

ரொட்டரிக் கழகமானது பிரசார ஆவணங்களை அச்சிடுவதிலும், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள் காலத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதிலும், இந்தியாவில் இருந்து டிஜிற்றல் வெப்பமானிகளை இறக்குமதி செய்வதிலும், ஸ்தாபன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தை இணைத்து இணையவழி கருத்தரங்குகளை (Webinars) நடத்துவதிலும் சுகாதார அமைச்சிற்கு உதவி செய்தது.



தமக்கு கூடுதலான ஆற்றல்கள் உண்டென்பதை ரொட்டரி அங்கத்தவர்கள் அறிவார்கள். எனவே, போலியோவிற்கு எதிரான போராட்டத்திலும், சுனாமி அனர்த்தத்தை அடுத்தும் எம்மில் உருவான அதே ஊக்கத்துடன், இலங்கையின் முன்னணி ஆய்வுகூடமான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (MRI) உதவி செய்வதற்காக சுகாதார அமைச்சுடன் (MOH) கைகோர்த்தது. இந்நிறுவனம் கொவிட்-19யை இனங்காணும் சோதனைகளில் முன்னணி வகிக்கிறது.

இலங்கையில் பாரிய அளவிலான ரொட்டரித் திட்டங்களை முன்னின்று நிறைவேற்றிய கடந்த ரொட்டரி சர்வதேசகழகத்தின் தலைவர் கே.ஆர்.ரவீந்திரனின் கீழ் விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தத் திட்டங்களில் போலியோவிற்கு எதிரான போராட்டங்கள், சுனாமியால் சேதமடைந்த 27 பாடசாலைகளை மீள நிர்மாணித்தல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். ரொட்டரியிலுள்ள மதிப்பிற்குரிய ஸ்தாபனத் தலைவர்களும் தொழில்துறை சார்ந்தவர்களும் செயலணியின் அங்கத்தவர்களாக கடமையாற்ற முன்வந்தார்கள்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக EY நிறுவனம் உத்தியோகபூர்வ கணக்காய்வு நிறுவனமாக நியமிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட ஆளுனர் செபஸ்ரியன் கருணாகரன் கருத்து வெளியிடுகையில்,

பரிசோதனைகளை மென்மேலும் விரைவாகவும், திருத்தமாகவும் நிறைவேற்றும் வகையில் MRI இன் வசதிகளை அதிகரித்து, அதன் உபகரணங்களை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் உதவி வழங்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இந்நிறுவனம் மென்மேலும் இலாவகமாக செயற்பட்டு, கூடுதலான தேவைகளை நிறைவேற்றி, அதன் மூலம் பரிசோதனை தொழில்நுட்பங்களில் உலக தரத்தை எட்டுவதற்கு நாம் உதவி செய்வோம், என்று தெரிவித்தார்.

MRI  இற்குத் தேவையான பிரதான கருவியானது முழுமையாக இயந்திர மயமாக்கப்பட்ட Nucleic Acid Extraction and PCR System என்பதாகும். இதன்மூலம் பரிசோதனைக்கான நேரத்தை எட்டு மணித்தியாலங்களில் இருந்து இரண்டு மணித்தியாலங்கள் வரை குறைத்து, மிகவும் திருத்தமான பரிசோதனைப் பெறுபேறுகளை வழங்க MRI ஆல் முடியும்.

இந்த வேகம் காரணமாக,  MRI ஆனது குறித்த காலப்பகுதிக்குள் கூடுதலான பரிசோதனைகளை செய்யக்கூடியதாக இருக்கும். இது ஆற்றல்களை அதிகரிப்பதாகும். ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளால் நோய் தொற்றக்கூடிய அபாயம் அதிகம் என்பதால், இதன்மூலம் MRI  ஆனது பாதுகாப்பான முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். இந்தக் கருவி இலங்கையில் இல்லை. தனியார்த் துறையிலும் கிடையாது. இந்தக் கருவியை, கொவிட்- 19 நெருக்கடியைத் தாண்டி, உறுப்புமாற்று நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த சிசுக்கள் ஆகியோர் மத்தியில் CMV, BKV, ஈரல் அழற்சி (ஏனைய 16 வைரஸ் தாக்கங்கள்) போன்றவற்றை சோதிக்கவும் பயன்படுத்த முடியும்.

இதற்குத் துணையான இணை கருவிகள்: பரிசோதனைக் கருவிகள் (Test KITS PCR Reagents), நுண்ணுயிர்களை அழிக்கும் நீராவி அழுத்தக்கருவி (Autoclaves), பாதுகாப்பு அலுமாரிகள், சுழற்சிக் கருவிகள் (Centrifuge),  குருதித் துணிக்கைகளை பரிசோதிக்கும் கருவி (3 Part Hematological Analyzer with CRP)

விசேட செயற்குழுவின் தலைவர் கே.ஆர். இரவீந்திரன் கருத்து வெளியிடுகையில், “தலைசிறந்த பரிசோதனை தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுப்பதற்கு மாத்திரமன்றி, எமது சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களை பாதுகாக்கவும் நாம் உதவுகிறோம். என்று தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “நாடெங்கிலும் உள்ள 70இற்கு மேற்பட்ட ரொட்டரி கழகங்கள் ஊடாக, களமுனையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் (PPE), முகக் கவசங்கள், பாதணிகள் போன்றவற்றை வழங்கி உதவுகின்றோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவினம் 150 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுகாதார அமைச்சு,  ரொட்டரி ஸ்ரீலங்கா ஆகியவற்றிற்கு இடையில் முறையான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு ரொட்டரி மன்றம், அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க, ஐக்கிய இராஜ்ஜிய ரொட்டரி மாவட்டங்கள் சார்ந்த மாவட்ட நிதியங்கள் போன்றவற்றின் உதவி கிடைத்ததோடு, எமது ரொட்டரிக் குடும்பமும்,  நன்மதிப்பை வென்ற ஸ்தாபனங்களான Carson Cumberbatch PLC, NDB Bank, LBR Foundation போன்றவையும் பங்களிப்பு வழங்கியிருந்தன.

கூடுதலான உதவி தேவை என்ற கோரிக்கை காரணமாக, நிதியூதவி வழங்குமாறு ரோட்டரி கழகம் மீண்டும் கோரிக்கை விடுக்க வேண்டியுள்ளது. இது முன்னெப்போதும் காணாத அவசரநிலை என்பதால், இந்தத் திட்டத்துடன் இணைந்து உதவ விரும்புவோர் அனுசரணை உள்ளிட்ட தகவல்களைப் பெற  https://covid19.rid3220.org/ என்ற இணையத் தளத்தை நாட முடியும்.

மனித குலத்தைப் பாதிக்கும் மிகத்தீவிரமான சவால்களை சமாளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் தன்னார்வத் தொண்டர்களின் உலகளாவிய வலைப்பின்னலை ரொட்டரி ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது.

இவ்வமைப்பானது, 200 இற்கு மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இயங்கும் 35. 000இற்கு மேலான ரொட்டரி கழகங்களைச் சேர்ந்த 1.2 மில்லியனைத் தாண்டிய அங்கத்தவர்களை இணைக்கிறது. தத்தமது சமூகங்களில் வாழும் தேவைகளுடன்-கூடிய-குடும்பங்களுக்கு உதவுதல் முதற்கொண்டு போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க பாடுபடுதல் வரையில், இவர்களது பணிகள் உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டங்களில் வாழ்க்கைகளை மேம்படுத்துகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56