இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 300 ஐ கடந்தது - மேல் மாகாணத்தில் அதிக  தொற்றாளர்கள்

20 Apr, 2020 | 10:11 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

 

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

இன்றைய தினத்தில்  இரவு 8.00 மணி வரையிலான 15 மணி நேரத்தில் 33  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்  அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் 7 தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், நேற்றும் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர்.

அதன்படி இதுவரை 98 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளனர். இந் நிலையில், 199  தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 122 ஆகும். அவர்கள்  நாடளாவிய ரீதியில் 23 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் இரவு 8 மணி வரையிலான காலப்பகுதியில்  அடையாளம் காணப்பட்ட 33 பேரும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

இந் நிலையில் தொடர்ந்தும் அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

அந்த தகவல்கள் பிரகாரம் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 187 ஆகும். இதில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக  களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும்,  புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில்  31 பேரும்  இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும்.  கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், கேகாலையில் மூவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிட  குருணாகல், மாத்தறை மற்றும் கல்முனை ஆகிய சுகாதார மாவட்டங்களில்  தலா இருவர் வீதமும்,  காலி, மட்டக்களப்பு,  பதுளை, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  இன்று இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 304 தொற்றாளர்களில், 3 வெளிநாட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36