கொரோனாவை எதிர்கொண்டது போல தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி சரியான முடிவை எடுப்பார் – டக்ளஸ் 

20 Apr, 2020 | 09:37 PM
image

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  சரியான முடிவை எடுத்திருந்தது போல நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சர்ச்சைக்கும் தீர்வுகாண சரியான முடிவையே எடுப்பார் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊடக நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

கொரோனா என்ற கொடிய தொற்றை எதிர்கொள்ள துறைசார் தரப்புகளான அமைச்சுக்கள், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்புக்களை ஒன்றிணைத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  எவ்வாறு சரியான தலைமைத்துவத்தை கொடுத்து அத்தொற்றை நாட்டில் பரவவிடாது வெற்றிகண்டாரோ அதே போல இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கள் பாதுக்காகப்படும் வகையில் தேர்தலை நடத்துவதா இல்லையான என்ற கேள்விகளுக்கும் பொருத்தமான தீர்வை வழங்குவார் என நம்புகின்றேன்.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ இருப்பதனால் தான் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய தொற்றை எதிர்கொண்டு எமது நாடு வெற்றிகண்டுள்ளது என்ற உணர்வு மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தேவையறிந்து சரியான தலைமையை கொடுக்கும் வகையான தலைவராக  கோட்டபய ராஜபக்ச இருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான தீர்வொன்றையும் வழங்குவார் என்று நம்புகின்றோன். அதற்கு பூரணமான ஒத்துழைப்பை நாட்டு மக்கள் அனைவரும் வழங்கவேண்டும்.

குறிப்பாக சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி அவர்களால் கூறப்படும் அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாக கடைப்பிடித்துடன் கொரோனா தொற்றை முற்று முழுதாக எமது பகுதிகளிலிருந்து ஒழித்து இயல்பு நிலையை முழுமையாக கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரவின் கொழும்பில்...

2024-10-14 00:14:51
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11