20 வருட நிறைவைக் கொண்டாடும் இலங்கையின் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் துறையின் முன்னோடியான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம், அதன் புதுமை, கூட்டாண்மை மற்றும் ஒப்பிட முடியாத அணியினருடன் கடந்த 2015/16 நிதியாண்டில் சாதனைமிகு நிதிசார் முடிவுகளை பதிவு செய்துள்ளது.

நிலையான நிதிச் செயற்பாடுகளில் இந்த நிறுவனத்தின் பிரமிப்பூட்டும் சாதனையானது ஒரு வலுவான மற்றும் நெகிழ்ச்சியான அடித்தளத்தை உருவாக்கி நிறுவனம் அதன் அணுகுமுறையில் அச்சமற்ற மற்றும் முழுமையாக செயற்பட வழிவகுத்துள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் மூலமாக 2015 இன் மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், 15 பில்லியன் ரூபாவுக்கு குறைவான வருவாய் பிரிவில் வெற்றியாளராகவும் CDB வெற்றிவாகை சூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் நிதிசார் முடிவுகள் குறித்து CDB நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில்,

“வலுவான நிதி நிறுவனமாக தம்மை நிலைப்படுத்தியுள்ள CDB இந்த ஆண்டும் கவர்ச்சிகரமான மைல்கல்லை அடைந்துள்ளது. ஐந்தொகை மீதி ரூபா 50 பில்லியனை கடந்து 50.6 பில்லியன் ரூபாவாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் 33 சதவீத வளர்ச்சியுடன் நாட்டின் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. வரிக்கு பின்னரான இலாபம் ரூபா ஒரு  பில்லியன் கடந்துள்ள அதேவேளை, 43 வீதத்தால் அதிகரித்துள்ளது. வருமானம் ரூபா 7.5 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தேறிய வட்டி வருமானமானது 3 பில்லியன் ரூபாவாக பதிவாகி 7 வீதத்தால் அதிகரித்திருந்தது. சேதக் கட்டணங்கள் மற்றும் அகற்றல் பற்றாக்குறைகள் ரூபா 399 மில்லியனாக பதிவானதுடன், ரூபா 281 மில்லியன் அல்லது 41 வீதத்தால் குறைவடைந்திருந்ததை காட்டியது. கடன் புத்தகம் ரூபா 38.5 பில்லியனாக பதிவாகி 31 வீதத்தால் வளர்ச்சியடைந்திருந்தது. சேதக் கட்டணங்களில் ஏற்பட்ட குறைவு காரணமாக மொத்த மற்றும் தேறிய செயற்படா கடன் விகிதமானது முறையே 5.8 வீதத்திலிருந்து 3.6 வீதமாகவும் 3.2 வீதத்திலிருந்து 1.6 வீதமாகவும் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வைப்பு நிதி ரூபா 30.8 பில்லியன் பதிவாகி 14 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதுடன், நிதியளிப்பில் முக்கிய ஆதாரமாக உள்ள கடன் நிதியளிப்பு ரூபா 7.5 பில்லியனாக பதிவாகி கவர்ச்சிகரமிக்க 156 வீதத்தால் உயர்வடைந்திருந்தது. வருமான செலவு விகிதம் 57.58 வீதமாகும்.

ஒழுங்குமுறை தேவைப்பாடுகளுக்கு அதிகமாக, மொத்த உரித்துடமை 5 பில்லியன் ரூபாவை தாண்டியதுடன், மூலதன விகிதத்தில் Tier I மற்றும் Tier II ஆகியன முறையே 11.72 வீதம் மற்றும் 11.74 வீதம் ஆக பதிவாகியுள்ளன. ஒழுங்குமுறை தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக திரவத்தன்மை விகிதம் 20.04 வீதமாக பதிவாகியுள்ளது. சொத்துக்களில் 76 வீதத்தை கொண்ட சொத்து கடன் புத்தகம் உள்ளடங்கிய முதலீடுகளில் 91 வீதம் வட்டி தாங்கும் சொத்துக்களாக உள்ளன. நிதிச் சேவைகள் NBT மற்றும் விளைவு தீர்வை வருவாய்க்கு முன்னரான வரியானது ரூபா 1.43 பில்லியனாக பதிவாக 36 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. வரிக்கு முன்னரான வருமானம் ரூபா 1.25 பில்லியன் ஆகும். இது 32 வீத அதிகரிப்பு ஆகும்.

ஐந்தொகை குறிப்பு தேதிக்கமைய,உரித்துடமை மீதான திரும்பல்கள் 21.78 வீதமாக உள்ளதுடன், பங்கொன்றிற்கான வருவாய் 18.51 ரூபாவாகவும் பங்கொன்றிற்கான தேறிய பெறுமதி ரூபா 93.03 ஆகவும் உள்ளது. இந்த வருடத்தில் CDB இன் விசேட குத்தகை துணை நிறுவனமானது அதன் பெயரை Unisons Capital Leasing Ltd (UCL) ஆக மாற்றம் செய்திருந்தது. 

UCL மூலமாக 2015/16 நிதியாண்டு காலப்பகுதியில் அறிவிக்கப்பட்டவாறு CDB முழுமையாக பங்கொன்றிற்கு 10.50 ரூபா வீதம் ரூபா 82.1 மில்லியனை முதலீடு செய்து UCL இல் 90.38மூ ஆக அதன் பங்கினை CDB அதிகரித்துக் கொண்டுள்ளது.

3 புதிய ATM கள் மற்றும் 3 கிளைகளை அதன் வலையமைப்புடன் இணைத்து மொத்தமாக 65 கிளைகளை கொண்டுள்ளது. அத்துடன் சிறந்த சேவையை வழங்கும் முகமாக 6 கிளைகளை இடம்மாற்றியுள்ளது. CDB நிறுவனத்தின் அலுவலகம் நடுநிலைமிக்க கரியமில நிறுவனமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. CDB இன் வர்த்தக மூலோபாயங்களில் பசுமை மீதான அக்கறை காணப்படுவதுடன், இந்தாண்டில் 22 சதவீதமான தானியங்க நிதியளிப்பில் ஹைபிரிட் மற்றும் இலத்திரனியல் வாகனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந்த நிறுவனம் அதன் பரிகனக பியஸ திட்டத்தின் ஊடாக வசதி குறைந்த பாடசாலைகளுக்கு IT ஆய்வுகூடங்களை அன்பளிப்பாகவும் CDB சிசுதிரி ஊடாக உயர் செயற்பாட்டாளர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்குவதோடு CDB ஹிதவத்கம மற்றும் CDB மிஹிலக ஆதரென் போன்ற திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.

மனித உணர்வுகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை ஒன்றாக்கி மக்கள் நோக்கிய மூலோபாயத்துடன் கூடிய கூட்டாண்மை நிறுவனத்தை கட்டியமைப்பதில் CDB உறுதியாகவுள்ளது. ‘மக்கள் வெற்றியீட்டுவதற்கான மூலோபாய சவால்’ எனும் மனப்போக்கின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள CDB ஆனது அதன் பெறுமதிமிக்க அணியுடன் உயர் போட்டிமிக்க சூழலில் நிறுவனத்தை வெற்றியை நோக்கி நகர்த்தி வருகிறது. ‘உங்கள் தோழன்’ எனும் எமது வர்த்தகநாம வாக்குறுதிக்கமைய, 2020ஆம் ஆண்டளவில் ரூபா 100 பில்லியன் ஐந்தொகை மீதியை பெறுவதே எமது இலக்காகும். CDB ஆனது பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஒழுங்கநெறிகளுடன் பொது நிதி காப்பாளர் எனும் வகையில் நிர்வாகம், கணக்கியல், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றை வலியுறுத்தி அதன் வளர்ச்சி பயணத்தை மேம்படுத்தவுள்ளது.