அப்புத்தளை பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்ந்தும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு, கைதுகளும், கசிப்பு வகைகளும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணத் தொகுதிகளையும், பீப்பாக்களையும் பொலிசார் மீட்டு வருகின்றனர்.

அத்துடன் இன்று, பெருந்தோட்ட இளைஞர்களாகவே முன்வந்து, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை பொலிசாருக்கு காட்டி வருகின்றதோடு, பொலிசாருக்கும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அப்புத்தளைப் பகுதியின் கோணமுட்டாவை பெருந்தோட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோணமுட்டாவை பெருந்தோட்டத்தில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணத் தொகுதிகள், பீப்பாக்கள், கசிப்பு வகைகள் ஆகியவற்றை மீட்க, தோட்ட இளைஞர் குழுவினர் பேருதவிகளை பொலிசாருக்கு வழங்கினர்.

ஆனால், அக்கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையாளரை கைதுசெய்ய பொலிசார் முற்பட்ட போதிலும், அந்நபர் தப்பியோடியுள்ளார்.

அவர் தப்பியோடிய போதிலும், அவரை கைதுசெய்ய முடியுமென்று அப்புத்தளைப் பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன், தொட்டலாகலை பெருந்தோட்டத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன், பெருமளவிலான கசிப்பு உற்பத்தி உபகரணத் தொகுதிகள் மற்றும் கசிப்பு வகைகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே, மேற்படி சுற்றி வலைப்புக்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.