தான் சென்று வந்த நாடுகளை தன் வீட்டுத்தோட்டத்தில் உருவாக்கி குழந்தைகளை மகிழ்வித்த தந்தை

Published By: Digital Desk 3

19 Apr, 2020 | 08:38 PM
image

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு பிரயாணம் செய்த தந்தை ஒருவர் தான் சென்று வந்த நாடுகளை தன் வீட்டுத்தோட்டத்தில் உருவாக்கி தனது குழந்தைகளை மகிழ்வித்துள்ளார்.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள்.

இத்தருணத்தில் அனைவரும்  தங்களது குடும்பத்தோடு நேரத்தை பல விதங்களில் மகிழ்வாக கழித்து வருகிறார்கள்.

அந்தவகையில், இலங்கை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரயாணம் செய்த தந்தை ஒருவர் தான் பெற்ற அழகிய அனுபவத்தை மனைவி, குழந்தைகளுடன் பகிர்ந்துள்ளார்.

குறித்த தந்தை தான் சென்ற நாடுகளில் சிலவற்றை சொந்த வீட்டுக்கு பின்புறமாக உள்ள தோட்டத்தில் மீண்டும் உருவாக்க முடிவு செய்தார், அவர்கள் அனைவருக்கும் ஒரு கைவினைத் திட்டத்தையும், விளையாடுவதற்கு ஒரு ‘புதிய’ அமைப்பையும் செய்து கொடுத்தார்.

அது மட்டுமல்லாமல், குறித்த நடவடிக்கையானது தனது இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்வரும் காலங்கயில் ஒரு சிறந்த புகைப்பட ஆல்பமாக பார்வையிடக் கூடியதாக இருக்கும்.

இதுவரை அவர்கள் நைல் நதி,வெனிசுலாவின் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி முதல் பிரான்ஸ் மற்றும் கியூபாவின் காட்சிகள் வரை 25 வெவ்வேறு நாடுகளைப்போன்று தங்கள் வீட்டுத்தோட்டத்தில் உருவாக்கியுள்ளார்கள்.

இலங்கை, சீனா,பெரு, ஜப்பான், அமெரிக்கா, மொரோக்கோ, தாய்லாந்து, பனாமா, பிரேசில், டிரினிடாட், பார்படோஸ்,  நெதர்லாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, பூட்டான், ரஷ்யா, ஐஸ்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை அமைக்க தனது வீட்டுத்தோட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

எசெக்ஸின் சிபில் ஹெடிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த டேவிட் என்ற குறித்த தந்தை செய்த படைப்புகள்  மனைவி எம்மா, மகள்களான 2 வயதுடைய ரோஸ் மற்றும் 4 வயதுடைய ரூபி ஆகியோருக்கு பெரும் பாக்கியமாக கிடைத்துள்ளது. 

இது தொடர்பில் ஹெடிங்ஹாம் பாடசாலையின் உதவி தலைமை ஆசிரியரும் தோட்டத்தை உருவாக்கியவருமான டேவிட் கூறுகையில்,

 ‘ஒவ்வொரு நாட்டின் அமைப்பையும் நகைச்சுவையாக சித்திரிக்கும் போது அதை வெளியே கொண்டு வர முயற்சித்தேன்.

வீட்டைச் சுற்றியுள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு பயன்படுத்துவதிலிருந்து, நான் இருந்த ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிரபலமான காட்சிகளை மீண்டும் உருவாக்கியுள்ளேன்.

மேலும், இந்த நேரத்தில் நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அது நம் அனைவரையும் சற்று மெதுவாக்கியுள்ளது.

 நாங்கள் பயன்படுத்திய கழிவுப் பொருட்களைக் கொண்டு இது போன்ற விஷயங்களை செய்வதற்கு இந்த நேரம் பயன்படுகின்றது. 

‘இதன் நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக, உற்சாகத்தைத் தூண்டுவதும், கடினமான நேரத்தில் மக்களை சிரிக்க வைப்பதும் ஆகும்.’ என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right