கொரோனா தொற்றினால், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் எந்த அளவுக்கு உதவுகிறது.

அதேபோல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் இந்த முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மிக பாரதூரமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்திய முகக்கவசங்களை பொதுமக்கள்  சாதாரண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

இவ்வாறு தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபயாம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு, கொரோனா தொற்றினால் பாதித்த ஒருவர் வீசும் ஒரு முகக்கவசத்தால் 10 பேருக்கு கொரோனா பரவும் என்றால், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், ஒவ்வொரு கொரோனா நோயாளி பயன்படுத்திய முகக்கவசங்களும் எத்தனை பேருக்கு கொரோனாவைப் பரப்பும் என்று கணக்கிட்டால் அது நிச்சயம் நிலைமையை மேலும் விபரீதமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஒருவருக்கு கொரோனா இல்லை, பாதுகாப்புக்காகத்தான் முகக்கவசம் அணிகிறார். அவர் தூக்கி எறியும் முகக்கவசத்தால் எப்படி கொரோனா பரவும் என்று கேட்கலாம்..

அதாவது, அவர் அருகில் நின்றவர் இருமியோ அல்லது தும்மியோ இருந்தால், இந்த நீர்த்திவலை மூலம் முகக்கவசத்தில் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கலாம். அதைத் தூக்கி எறிந்தால் கொரோனா பரவும்.

அவ்வாறு இல்லாமல், சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான். 

எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.