சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்தாட்ட அணிகளின் புதிய தரவரிசைகளுக்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட அணி ஒரு இடம் கீழ் இறங்கி 206 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற கால்பந்தாட்டத் தொடரின் குழு நிலை சுற்றின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது. இதில் பலஸ்தீன அணிக்கெதிரான போட்டியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கிலும், பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 3 க்கு 0 என்ற கோல் கணக்கிலும் தோல்வியடைந்திருந்தது.

பீபா தரவரிசையில் மொத்தமாக 210 நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில், மேற்படித் தொடரில் தோல்வியைத் தழுவிய இலங்கை 206 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமை இலங்கையின் கால்பந்தாட்டத் துறை எங்கே செல்கின்றது என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 200 ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 205 ஆவது இடத்திலிருந்ததுடன், தற்போது 206 ஆவது இடத்தைப் பிடித்து மோசமான வரலாற்றை பதிவு செய்துள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM