டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நம்பிக்கையில் சானியா

19 Apr, 2020 | 02:55 PM
image

கொரோனா வைராஸ் தாக்கத்தால் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் தன்னால் விளையாட முடியும் என இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து ஒன்லைன் மூலமாக கருத்து தெரிவித்துள்ள சானியா மிர்ஸா,  

‘கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருப்பதால் எல்லோருக்கும் கடினமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஊரடங்கால் மக்கள் மத்தியில் மனிதநேயம் மீண்டும் தளைத்து இருக்கிறது.

கொரோனா காரணமாக டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் மைதானத்துக்குள் நுழையும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தை, வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானதாகும். 

அதேநேரத்தில் ரசிகர்கள் இன்றி தான் போட்டி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது சிறந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் அனுமதியின்றி காலியாக இருக்கும் அரங்கில் விளையாட தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இரண்டாவது குழந்தை பெற்ற பிறகு டென்னிஸ் போட்டிக்கு திரும்புவதற்காக 2 ஆண்டுகள் நான் கடினமாக உழைத்து இருக்கிறேன். 

இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட நான் தயாராக இருந்தேன். அதற்கு தயாராக இல்லையெனில் நான் மீண்டும்டென்னிஸுக்கு திரும்பியிருக்க மாட்டேன்.  சொல்லப்போனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போனது எனக்கு லேசான பின்னடைவு தான். ஏனெனில், அடுத்த ஆண்டு எனக்கு மேலும் ஒரு வயது அதிகரித்து விடும். அது சரியான விடயம் அல்ல. சர்வதேச போட்டிக்கு திரும்பும் போது நல்ல நிலையை எட்ட நேரம் பிடிக்க தான் செய்யும். 

கொரோனா பிரச்சினை ஓய்ந்த பிறகு நான் பழைய நிலைக்கு திரும்ப நிறைய விடயங்களை செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்பு விளையாட்டு போட்டிகள்  இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறேன். நானும் மீண்டும் விளையாட ஆரம்பித்து விடுவேன். அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை...

2024-10-13 23:45:22
news-image

பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட்...

2024-10-14 00:15:30
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்டத்தில் இலங்கை ஐந்தாம்...

2024-10-13 17:01:19
news-image

சகலதுறைகளிலும் கேர் பிரகாசிப்பு: இலங்கையுடனான போட்டியில்...

2024-10-13 04:26:05
news-image

பங்களாதேஷுக்கு எதிரான மகளிர் ரி20 உலகக்...

2024-10-13 04:23:14
news-image

இலங்கை மகளிர் அணி மிக மோசமாக...

2024-10-12 15:11:16
news-image

பாகிஸ்தானை 9 விக்கெட்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா...

2024-10-12 01:08:44
news-image

20 வயதின்கீழ் ஆண்களுக்கான மத்திய ஆசிய...

2024-10-11 19:39:38
news-image

பாகிஸ்தானை இன்னிங்ஸால் வென்றது இங்கிலாந்து; வரலாறு...

2024-10-11 15:36:18
news-image

பங்களாதேஷை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 8...

2024-10-10 23:19:28
news-image

ப்றூக் முச்சதம், ரூட் இரட்டைச் சதம்;...

2024-10-10 22:41:38
news-image

பின்கள வீரர்களின் தவறுகளாலும் கோல்காப்பாளரின் கவனக்குறைவாலும்...

2024-10-10 19:17:14