இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள வெனிசுலா பாராளுமன்ற தேர்தலை 2021 ஜனவரி வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று அந் நாட்டு ஜனாதிபதி நிக்லஸ் மதுரே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற காணொளி  நேர்காணலில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த சூழலில் தேர்தல்களை நடத்துவது பொறுப்பற்ற செயல் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் முடிவினை மேற்கொள்ள வேண்டியது உயர் நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்றும் மதுரே மேலும் கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 227 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 09 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.