கிளிநொச்சியில் மரக்கறி உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் பல விவசாயிகள் தற்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பெரும்  நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

பலரது தோட்டங்களில்  மரக்கறிகள் அழுகிய, முற்றிய நிலையில் காணப்படுகிறது. பெருமளவு நிதிச் செலவில் ஏக்கர் கணக்கில் விவசாய உற்பத்தி நடவடிக்கையில் ஈடுப்பட்ட போதும் அவற்றை சந்தைப் படுத்த முடியாது பெரும் நட்டத்தை தாம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் காரணமாக சந்தைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும், கண்முன்னே அழிவடைக்கின்ற மரக்கறி உற்பத்திகளை பார்க்க மிக வேதனையாக இருப்பதாகவும்  விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில்  மட்டும் ஒரு சில விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதோடு, ஏனைய உற்பத்திப் பொருட்களும் அழிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.