தாய், சகோதரனுடன் சென்ற 10 வயது சிறுமி மின்னல் தாக்கி பரிதாபமாக பலி: கொஸ்லந்தையில் சோகம்

Published By: J.G.Stephan

19 Apr, 2020 | 09:32 AM
image

சேனைப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள, தனது தாய் மற்றும் சகோதரனுடன் சென்ற பத்து வயது நிரம்பிய சிறுமி மின்னல் தாக்கி பலியான சம்பவமொன்று நேற்று மாலை கொஸ்லந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொஸ்லந்தை பகுதியின் ஓக்வில் தோட்டத்தினைச் சேர்ந்த மோகன்ராஜ்  ருக்சி என்ற பத்து வயதுச் சிறுமியே மின்னல் தாக்கி பலியாகியுள்ளார்.

ஓக்வில் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமியும் அவரது தாய் மற்றும் சகோதரனும் சேனைப் பயிர்ச்செய்கையினை பாதுகாக்கவும், காட்டு யானைகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரமொன்றின் மேல் குடில் அமைத்து இரவு வேளைகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று கடும் மழை பெய்து கொண்டிருப்பதையடுத்து இடி மின்னல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் மின்னல் தாக்கி இச்சிறுமி கீழே விழுந்துள்ளார். உடனடியாக இச்சிறுமி வெல்லவாய அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் அச்சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய அரசினர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17