(மயூரன்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் முன்  பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கொடிகாமம் புத்தூர் சந்தி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே தற்கொலை செய்துள்ளார்.

சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி சாவகச்சேரி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதன்பின் சடலம்  பொலிஸ் விசாரணைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.