ஜப்பானின் டோக்கியோவிலிருந்து சுமார் ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒகசவரா தீவுகளில் 6.9 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 490 கிலோ மீற்றர் ஆழத்திலேயே ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்களில் தெரிவிக்கப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஜப்பான் அடிக்கடி சக்தி வாய்ந்த நில நடுக்கங்களினால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

2011 ஆம் ஆண்டில், 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உண்டான சுனாமியினால் 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.