எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ரயில்கள் மற்றும் பஸ்களை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 20 முதல் 5000 பஸ்கள் மற்றும் 400 ரயில் சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொது போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சகம் நேற்றைய தினம் தீர்மானம் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.