logo

ஆதரவற்ற பெண் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்த பொலிஸார்

17 Apr, 2020 | 11:00 PM
image

இந்தியாவில், ஊரடங்கு சமயத்தில் இறந்த ஆதரவற்ற பெண்ணின் உடலுக்கு, இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்த போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வரும் 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தின் கிஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவர், உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தார்.

குடும்பம் மற்றும் உறவினர் யாரும் இன்றி தனியே வசித்து வந்ததால், மீனாவின் உடலுக்கு, இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்வதற்கு கூட யாரும் முன்வரவில்லை.

இது குறித்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரிக்கு தகவல் தெரிந்துள்ளது.

இதையடுத்து அவர், சில பொலிஸாரை அழைத்து வந்து மீனாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போலீஸாரே மீனாவின் உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரி மற்றும் போலீஸாருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாரடைப்பால் மரணமடைந்த 41 வயது இதய...

2023-06-08 16:42:21
news-image

பிரான்சில் சிறுவர்களை இலக்குவைத்து கத்திக்குத்து தாக்குதல்...

2023-06-08 15:00:51
news-image

ஒடிசா ரயில் விபத்து இழப்பீட்டுத் தொகைக்காக...

2023-06-08 14:46:22
news-image

ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கின்றது அவுஸ்திரேலியா...

2023-06-08 13:12:56
news-image

கடல்சார் இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியா...

2023-06-08 15:45:40
news-image

உக்ரைனில் அணைதகர்க்கப்பட்டதை தொடர்ந்து நீரில் மிதக்கும்...

2023-06-08 12:53:03
news-image

இந்திய இராணுவ ஜெட் இயந்திரங்களை தயாரிக்க...

2023-06-08 12:54:02
news-image

2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி:...

2023-06-08 11:52:41
news-image

கனடாவின் காட்டுதீயினால் அமெரிக்காவின் கிழக்கு பகுதி...

2023-06-08 12:36:11
news-image

பயங்கரவாதத்தை தோற்கடித்து துடிப்பான பிராந்தியமாக முன்னேறியுள்ள...

2023-06-07 21:59:11
news-image

அமெரிக்கா, ஜெர்மனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த...

2023-06-07 21:25:08
news-image

உக்ரைன் அணை தகர்ப்பினால் பாரிய சுற்றுசூழல்...

2023-06-07 15:27:20