நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

இவ் நிதியத்திற்கு இன்று (17) பிற்பகல் வரையறுக்கப்பட்ட விஜய வியாபார குழுமம் மற்றும் CIB வர்த்தக நிறுவனம் 15 மில்லியன் ரூபாவும், இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் சங்கம் 15.5 மில்லியன் ரூபாவும் அன்பளிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்விடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் அளவையியல் திணைக்களத்தின் பணிக்குழாம் அதிகாரிகள் சங்கம், பட்டதாரி பணிக்குழாம் அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றால் 5 லட்சம் ரூபா நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதனையடுத்து கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். 

அத்துடன் சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.