உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையோரை கைதுசெய்வதில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது : லக்ஷ்மன் யாப்பா

Published By: J.G.Stephan

17 Apr, 2020 | 04:41 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றமை நகைச்சுவையாக இருக்கிறது.

காரணம் ஜனாதிபதி செயலகத்தினால் அல்லது அலரி மாளிகையினால் அனுப்பப்பட்ட கடிதங்களை வைத்துக் கொண்டு யாரும் கைது செய்யப்படுவதில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

மேலும், தேர்தலை இலக்காகக் கொண்டு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றமை நகைச்சுவையாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் அல்லது அலரி மாளிகையினால் அனுப்பப்பட்ட கடிதங்களை வைத்துக் கொண்டு யாரும் கைது செய்யப்படுவதில்லை.



இந்த விசாரணைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் தலையீடுகள் இடம்பெறவில்லை. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்க குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தார். இந்த குழு தேர்தல் காலத்தில் நியமிக்கப்படவில்லை. அக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த அறிக்கை  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அமைச்சரொருவரின் சகோதரரா அல்லது பிரிதொருவரா என்பது பற்றி ஆராயப்படமாட்டாது. சட்ட ரீதியாக இவற்றை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40