ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் ஒன்றரை கிலோகிராம்  கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இன்றைய தினம் காலை கஞ்சா கடத்தப்படுவதாக மாதகல் கடற்படையினரால்  தகவலொன்று கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து இக் கடத்தல் நிகழ்வை முறியடிக்கும் வகையில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே இளவாலையிலுள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள  காட்டு பகுதியில் இருந்து இந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டது.  

இதனை வேறொருவருக்கு கைமாற்றுவதற்காக  காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.