இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் கிடைத்த தினேஷ் கார்த்திக் தொடரச்சியாக சோபிக்கத் தவறியமை மற்றும் மஹேந்திர சிங் தோனியின் வருகை ஆகியவை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது.
எனினும்,கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் இடம் கிடைத்தது. 2018 இல் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில், கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், அவருக்கும் அணியில் நிலையான இடம் கிடைத்தது.
ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதுடன், அதன்பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை.
சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து தன்னை தெரிவு செய்யாமைக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், சர்வதேச இருபது 20 போட்டிகளில் தெரிவு செய்யாமைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள தினேஷ் கார்த்திக், இருந்த போதிலும் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,
‘‘இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் எனது புள்ளி விபரங்கள் சிறப்பாக உள்ளன. உலகக் கிண்ணம் போன்ற மிகப்பெரிய தொடரில் திட்டத்தை சரியாக செயற்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆகவே, ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது கூட டி20 அணிக்கு என்னால் திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.
அண்மையில் நான் விளையாடிய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடியுள்ளேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப மாட்டேன் என்று சந்தேகப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM