(செ.தேன்மொழி)

நிலாவெளி பகுதியில் கடவுச் சீட்டு மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலாவெளி - வேலூர் பகுதியில்  வியாழக்கிழமை பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்தியாவைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் கடவுச்சீட்டோ வீசா அனுமதிப்பத்திரமோ இல்லை என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸார் சந்தேக நபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன் நீதிவான் அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.