(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

விசேட வினாவை எழுப்புவதற்கு எழுந்த ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நினைத்து அடிக்கடி புன்னகைத்தவாறேயிருந்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 23 இன் கீழ் இரண்டில்-  கேள்வி எழுப்புவதற்கு எழுந்த ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., ஆரம்பம் முதலே புன்னகைத்தவாறே இருந்தார். அவர் ஏன் புன்னகைக்கிறார் என அனைத்து உறுப்பினர்களும் அவரை நோக்கியவாறேயிருந்தனர்.

அச்சமயத்தில் “இந்த ரஞ்சன் உறுப்பினரால் தான் நான் புன்னகைத்துக் கொண்டிருக்கின்றேன். அவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல விடுதியை சினிமா படப்பிடிப்புத்தளமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அவ்வாறு அவரின் செயற்பாட்டை நினைத்தால் சிரிக்காமல் என்ன செய்வது எனக் கூறி தனது வினாவுக்கான உரையைத் தொடர்ந்தார்.