மஹேந்திர சிங் தோனி இன்னமும் புதுமையாகவே தோன்றுகிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னமும் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதியன்று ஆரம்பமாகவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை தோனி நம்பியிருந்தார். ஆனால் ஐ.பி.எல். தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கான சிக்கல் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், தோனிக்கான கிரிக்கெட் இன்னமும் உள்ளது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘தோனி சிறப்பாக துடுப்பெடுத்தாடுகிறார். அவருக்கான கிரிக்கெட் இன்னமும் உள்ளது. அவர் புதுமையாக தோன்றுகிறார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி போட்டியில் அவர் அடித்த சில சிக்ஸர்கள் மிகப்பெரியதாக இருந்தன.

சென்னையில் அடித்த வெயிலுக்கு தொடர்ந்து மூன்று மணி நேரம் துடப்பெடுத்தாடவது எளிதானது அல்ல. அந்த் நிலையிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது புதுமையானதாகும்’’என்றார்.