பிரான்ஸ் டூலேன் விரிகுடாவில் நங்கூரமிடப்பட்டுள்ள பிரான்ஸ் விமானந்தாங்கி கப்பலான சார்லஸ் டி கோல்லின் என்ற கப்பலின் கடற்படை குழுவைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந் நாட்டின் ஆயுதப் படை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 12 ஆம் திகதி டூலேன் விரிகுடாவில் நங்கூரமிடப்பட்ட குறித்த கப்பலில் 668 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமான சோதனையை செய்துள்ளனர்.

சார்லஸ் டி கோலே மற்றும் அதன் துணை கப்பல்களில் இருந்து மொத்தம் 1,767 பேர் சோதனை செய்யப்பட்டனர்.

நிலையிலேயே அவர்களில் 668 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் விமானந்தாங்கி முதன்மை கப்பலில் பயணித்தவர்கள்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 31 பேர் டூலேனில் உள்ள செயின்ட் அன்னே இராணுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பத்தில் கப்பலில் 50 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  சார்லஸ் டி கோலேவும் அதன் துணைக் கப்பலும் டூலேன் விரிகுடாவை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN