கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக வெடித்ததில் துப்பாக்கி குண்டு மற்றுமொரு கான்ஸ்டபிள் மீது பாய்ந்துள்ளது.

இதனால் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தினுள்ளே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.