நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் சட்டவிரோத குடியற்றங்களை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினர் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

கொரோனா ‍வைரஸ் பரவல் காரணமாக அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவை இடம்பெற வாய்ப்புள்ளதாக கருதியே இந்த வான்வழி கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்  படையினர் தெரிவித்துள்ளனர்.