தமிழ் நாட்டின்  தென்காசி அருகில் உள்ள அய்யாபுரம் கிராமத்தின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொரோனா விலிருந்து தமது ஊரை பாதுகாகக்க பல  கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளைஞர்கள் ஒன்று இணைந்து ஊரின் முகப்பின் சுவரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தும்  தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர்.

டிரம்களில் தண்ணீர்  மற்றும் சவற்காரம் வைக்கப்பட்டு ஊருக்குள் செல்பவர்கள் தங்கள் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின் முகக்கவசம் அணிந்த பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதே வேளை இவ் கிராமத்தின் குழந்தைகள் ஒன்றிணைந்து தனது பெற்றோர்கள் உதவியுடன் கொரோனாவுக்கான விழிப்புணர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸில் பாதிப்பு,உயிரிழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முடியாமல் லட்சக்கணக்கில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மற்றும் பலர்பல விதங்களில் மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தருதல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் என பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழக அரசின் விழிப்புணர்வு வாசகமான விழித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!!

அந்த விழிப்புணர் வாசகத்தை அய்யாபுரத்தின் குழந்தைகள் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு தங்களின் வீட்டிலையே ஒரு காகிதத்தில் எழுதி தன் பெற்றோர் உதவியுடன் புகைப்படம் எடுத்து மக்களுக்கும் தன் சொந்த பந்தங்களுக்கும் வீட்டில் இருக்கும் அவசியத்தை விழிப்புணர்வாக ஏற்படுத்தினார்.   

குழந்தைகளின் இந்த முயற்சியை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர். இதில் பங்குபெற்ற குழந்தைகள் யுகன், யுவதி, முகி ஷிவானி, மாலினி, ஸ்ரீ கோகுல தர்ஷினி, வைஷாந்த், அக்ஷய மஹதி ஸ்ரீ, சக்தி பாலா, அம்ரித், ஷியாம் விக்னேஷ், ஸ்ரீ இவேஷினி, பவுனிகா ஸ்ரீ, இஷாலினி பாலா, அனாமிகா, அவினாஷ் மற்றும் வைணவி.