"கொரோனாவை வெல்வோம்...." நடிகர் வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்...

By J.G.Stephan

16 Apr, 2020 | 10:43 AM
image

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, மக்கள் மனங்களை வென்றவரே, நடிகர் வடிவேலு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் காமெடியில் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர்,  சிறிய இடைவெளிக்குப் பிறகு கமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் வடிவேலு கொரோனாவை வெல்வோம் என்று பதிவு செய்து ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளதோடு, அண்மையில் மக்களை வெளியில் வராமல், வீட்டினுள்ளே பாதுகாப்பாக இருக்கும் படி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மனிதர்களின் அலட்சியமும், அதை கொரோனா எப்படி உணர வைத்தது என்றும் அவர் தனது பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனாவை வெல்வோம் பாடலைக் கேட்க - 

https://www.youtube.com/watch?v=FZrjMUKVebs&fbclid=IwAR2_Z8Dmc5uv2-wxOXu52IB75JN3vR-2E8HZ0WhnsKisSc2IyJU61Oit5ZQ

முக்கிய செய்திகள்

icon-left
icon-right