கொவிட் 19 பரவலால், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாக மக்கள் மரணிப்பதானது, உலக மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நேற்று (15.04.2020)  ஒரே நாளில்  மாத்திரம் 2,479 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டுகிறது.

மேலும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 க்கும் அதிகமானோர் மாண்டு போகின்றனர்.இதனையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 28,526 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் 1,438 பேர் பலியாகியுள்ளனர். 

பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,167 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழப்புகளில் அமெரிக்காவை தொடர்ந்து 2 ஆம் இடத்தை இத்தாலி பெறுகின்றது. இத்தாலியில் 21,645 பேர் மொத்தம் மரணமடைந்துள்ளனர். 


மேலும், ஸ்பெயினில் 18,812 பேரும், இங்கிலாந்தில் 12,868 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளதோடு, ஈரானில் 4,777, பெல்ஜியத்தில் 4,440, நெதர்லாந்தில் 3,134 பேர் என கொரோனாவால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,34,540 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 82, 296 ஆகவும் அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.