இன்று இந்த இறுக்கமான சூழ்நிலையில் அனைத்துத் தரப்பும் பாதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அரசாங்கம் திடீரென வரிச்சலுகைகளை மீளாய்வு செய்து, புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், இது அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளையே எடுத்துக் காட்டுகின்றன என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஜனநாயக மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டவேட்பாளருமான கலாநிதி ஜனகன் வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இன்று எமது நாடு உட்பட உலகில் பல நாடுகள் மிகப் பெரியபொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் வரிச்சலுகைகள் மற்றும்பொருளாதாரச் சலுகைகளையே பொறுப்புவாய்ந்த அரசாங்கங்கள் செய்துவருகின்றன.

ஆனால், இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பெடுத்தவுடன் பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் மீறி VAT குறைப்பு, PAYEE tax மற்றும் Withholding tax என்பவற்றை இல்லாமல் செய்தமை எனப் பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கியது. 

“ஆனால், இன்று இந்த இறுக்கமான சூழ்நிலையில் அனைத்துத் தரப்பும் பாதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில்அரசாங்கம் திடீரென வரிச்சலுகைகளை மீளாய்வு செய்து, புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுஅரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் காட்டுகின்றது. இன்று அறிமுகப்படுத்தியுள்ள Advance Personal Income Tax (APIT) ஆனது, ஏற்கெனவே இல்லாது ஒழிக்கப்பட்ட PAYEE மற்றும் Withholding வரிகளையே மீண்டும் புதிய பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

“இன்று 500,000 இற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய மற்றும் நடுத்தரநிறுவனங்களைக் காப்பாற்றும் வகையில் பொருளாதார திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தவேண்டும். 

இதற்காக, VAT ஐக் குறைந்தது 6 மாதங்களுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும். இன்று ஊதியம் கொடுக்கமுடியாமல் பல நிறுவனங்கள் தடுமாறுகின்றவேளையில் EPF மற்றும் ETF என்பவற்றைக் குறைந்தது முதற்காலாண்டுக்காவது தள்ளுபடி செய்ய வேண்டும். நிறுவன வரிகளை (Cooperate Tax) 12 மாதங்களுக்காவது தள்ளுபடி செய்ய வேண்டும்.

 இன்று முக்கியமாகச் சில்லறை வர்த்தகம், சுற்றுலா துறை சார்ந்த ஊழியர்கள் சம்பளம் பெறமுடியாமல்தவிப்பதால் அவர்களுடைய நலன் கருதி உடனடியாக நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 

இந்த நெருக்கடியான சூழலில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழிற்றுறை நிற்சயமாகத்தொடர்ச்சியாகத் தொழிற்பட வேண்டும். இதற்காக அவை நிதி நெருக்கடியினால் மூடும் நிலைக்குச்செல்வதனைத் தவிர்ப்பதற்கு ஏற்றவகையில் வரி நிலுவைகளைச் செலுத்துவதற்குப் புதிய தவணைக் கட்டணமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

“ஆகவே பொறுப்புள்ள அரசாங்கம் இது வரிகள் அறவிடுவதற்கான காலம் அல்ல; மாறாக வரி மற்றும் இதரசலுகைகள் வழங்குவதற்கான காலம் என்பதனைப் புரிந்து செயற்பட வேண்டும்” என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.