புறக்­கோட்­டையில் கார் ஒன்­றினுள் நடத்தி வரப்­பட்ட நட­மாடும் விப­சார விடுதி ஒன்­றினை பொலிஸார் முற்­று­கை­யிட்டு மூன்று யுவ­திகள் மற்றும் இரு ஆட­வர்­களைக் கைதுசெய்­துள்­ளனர். பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் காலி முகத்­திடல் பிர­தே­சத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்­யப்­பட்­ட­தா­கவும் பின்னர் அவர்கள் மாளி­கா­கந்த நீதிவான் நீதி­மன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர் செய்­யப்­பட்ட போது 100 ரூபா அப­ராதம் செலுத்­திய பின்னர் விடு­தலைச் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பெண்­களை விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்தி வெளி நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­பனைச் செய்­வது தொடர்பில் புறக்கோட்டை பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து பொலிஸ் குழு­வொன்ரு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. அதன்­படி தொலை­பேசி ஊடாக தர­கரை தொடர்­பு­கொண்­டுள்ள பொலிஸார் தாம் யார் என்­பதை அறி­விக்­காது விப­சா­ரி­களை நாடு­ப­வர்கள் போல உபா­ய­மாக கதைத்­துள்­ளனர்.


இத­னை­ய­டுத்து ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட இணக்­கத்­துக்கு அமை­வாக காலி முகத்­திடல் பிர­தே­சத்­துக்கு வாடிக்­கை­யா­ள­ராக நடித்த பொலி­ஸாரை வரு­மாறும் தர­கரால் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து காலி முகத்­திடல் பிர­தே­சத்­துக்கு சென்ற பொலிஸார் அங்கு மறைந்­தி­ருந்­த­துடன் அங்கு கார் ஒன்றில் வந்த மூன்று யுவ­திகள் இரு ஆட­வர்­களை சுற்றி வளைத்து கைதுசெய்­தனர்.


கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் பொலி ஸார் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், பொது வாக குறித்த பெண்கள் வெளி நாட்­ட­வர்­க­ளுக்கு விற்பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் ஒரு பெண் தொடர்பில் 45 அமெ­ரிக்க டொலர்கள் (6383 ரூபா) கட்­ட­ண­மாக அற­வி­டப்­ப­டு­வதும் தெரி­ய­வந்­துள்­ளது.


இந்த நிலையில் கைதான ஐவ­ரையும் புறக்­கோட்டை பொலிஸார் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது அந்த ஐவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவே தலா 100 ரூபா அபராதம் விதித்த நீதிவான் அவர்களை விடுதலைச் செய்துள்ளார்.