சீசெல்ஸ் தீவின் கடற் பிராந்தியத்தில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ஆறு மீனவர்களுடன் இலங்கை மீனவப் படகொன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு படை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

SAMPATH, IMU-A-0911KLP என்ற மீன்பிடிப்படகே இவ்வாறு அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் பயணித்த ஆறு மீனவர்களும் தற்போது விக்டோரியா துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், கையகப்படுத்தப்பட்டுள்ள படகானது குறித்த துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சீசெல்ஸ் தீவின் கடலோர காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மூன்றாவது மீன்பிடி படகு இதுவாகும்.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமான சீசெல்ஸ், 1.4 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit :seychelles news agency