மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ், உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதியளிப்பதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவை கண்டித்துள்ளார்.

இது குறித்து பில் கேட்ஸ் தனது உத்தயோபூர்வ டுவிட்டர் பதிவில்,

உலக சுகாதார நெருக்கடியின் போது உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதியளிப்பதை நிறுத்துவது ஆபத்தானது எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் கடுமையாக போராடி வருகின்ற நிலையில் அதற்கான அமெரிக்காவின் நிதியுதவிகளை நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலேயே பில் கேட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

Photo Credit : CNN