கந்தளாய் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது துப்பாக்கியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது தவறுதலாக மற்றுமொரு கான்ஸ்டபிள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

குறித்த சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தினுள்ளே இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.