உலகையே நிலைக்குலையச்செய்துள்ள கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால், வல்லரசு நாடான அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,407 பேர் பலியாகினர்.

மற்றைய நாடுகளிலுள்ள சுகாதார வசதிகளைப் பார்க்கிலும், வல்லரசு நாடாக இருப்பினும் அமெரிக்காவில் சுகாதார வசதிகள் சற்று மந்தகதியிலேயே நிகழ்ந்து வருவதாக தெரியவருகின்றது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் வினவப்பட்டே வருகின்றது.இந்நிலையில்,  அமெரிக்காவில் இதுவரை 26,047 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் மிக அதிகமான துயரைச் சந்தித்துள்ளது அமெரிக்கா. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், மொத்தம் 6,13,886 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையோ 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,407 பேர் பலியாகினர். இங்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,047. இத்தாலியில் மொத்தம் 1,62,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், இத்தாலியில் நேற்று மட்டும் 602 பேர் உயிரிழந்தனர். இதுவரை இத்தாலியில் 21,067 பேர் மரணமடைந்துள்ளனர்.

அடுத்ததாக, ஸ்பெயினில் கொரோனாவால் மாண்டவர்கள் எண்ணிக்கை 18,255. இங்கு இத்தாலியை விட மிக அதிக அளவில் அதாவது 1,74,060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஜெர்மனியில் கொரோனா பாதிப்பில் ஏறத்தாழ சம அளவில் உள்ளன. பிரான்ஸில் 1,43,303 பேரும் ஜெர்மனியில் 1,32,210 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 ஆனால் பிரான்ஸில் கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,729. ஜெர்மனியில் உயிரிழப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது. இங்கு மொத்தம் 3,495 பேர் மரணமடைந்தனர். கொரோனா தனது உக்கிரத்தைக் காட்டிய தேசங்களில் ஒன்று இங்கிலாந்து. 

அரச குடும்பத்தினரையும் பிரதமரையும் விட்டுவைக்காத நிலையில், . கொரோனாவால் 93,873 பேர் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில் மொத்தம் 12,107 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,341 மட்டுமே.